இதோ அடுத்த அறிவிப்பு! பிரதமரின் இந்தோனேஷிய பயணத்திலும் 'பாரத்' பெயர்!

பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் இந்தோனேஷிய பயண நிகழ்ச்சி நிரலிலும் ‘பாரத்’ இடம்பெற்றிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்படுவதாக தகவல் பரவி வருகிறது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தோனேஷியா புறப்பட இருக்கிறார். இதையொட்டி, அதன் நிகழ்ச்சி நிரலில் பாரத் பெயர் இடம்பெற்றுள்ளது. அதாவது, பாரத பிரதமரின் இந்தோனேஷிய பயண நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com