நீரஜ் சோப்ரா - மோடி
நீரஜ் சோப்ரா - மோடிமுகநூல்

"உங்களின் தூய்மையான அன்பு.." நீரஜ் சோப்ராவின் தாயார் சமையல் குறித்து பிரதமர் மோடி உருக்கமான கடிதம்!

ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவின் தாயார் செய்து கொடுத்த உணவை சுவைத்த பிரதமர் மோடி, அவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
Published on

ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவின் தாயார் செய்து கொடுத்த உணவை சுவைத்த பிரதமர் மோடி, அவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பிதரமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த நீரஜ் சோப்ரா, அவருக்கு தான் தாய் சமைத்து கொடுத்து உணவை அளித்துள்ளார். உணவை சுவைத்த பிரதமர் நரேந்திர மோடி நீரஜின் தாய்க்கு அன்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ”நீங்கள் கொடுத்து அனுப்பிய உணவு எனக்கு கிடைத்தது அதை சுவைத்த பின் நான் உணர்ச்சிவயப்பட்டேன்.

நீரஜ் சோப்ரா - மோடி
HeadLines Today| சிரியாவில் ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல் To சமந்தா-நாக சைதன்யா மணமுறிவு விவகாரம்

உங்களின் தூய்மையான அன்பு எனக்கு என் தாயாரின் நினைவுகளை தூண்டியது. நவராத்திரிக்கு விரதம் இருக்கும் முன் இந்த உணவு கிடைத்ததில் மகிழ்ச்சி. 9 நாட்கள் விரதம் இருக்க இது எனக்கு உதவும். உங்களின் உணவுதான் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உதவுகிறது. இந்த தேசத்திற்காக சேவையாற்ற எனக்கும் வலிமை அளித்துள்ளது.” என்று பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com