\
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பூசிக்கான புதிய கொள்கை அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 82.7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நேற்று தடுப்பூசிகள் செலுத்துவதில் மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தன. தமிழகத்தில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 321 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைக்கப்பட்டதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தடுப்பூசி தான் கொரோனாவை எதிர்ப்பதற்கான வலிமையான பேராயுதம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com