பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையும், வரலாற்றுப் பின்னணியும்..

இறுதிக்கட்டத் தேர்தல் பரப்புரைகள் முடிவடைந்தபிறகு மூன்று நாட்களுக்கு கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரிபுதிய தலைமுறை

நாட்டின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் நாளை மாலை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்ய உள்ளதாக பாரதிய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப்பிறகு கேதார்நாத்தில் உள்ள குகைக்குச் சென்று பிரதமர் தியானம் செய்தார். அதேபோல, தற்போது கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி ஏன்?

பாஜக தரப்பில், “கவுதம புத்தருக்கு சாரநாத் போல, விவேகானந்தருக்கு கன்னியாகுமரி பாறையில் செய்த தியானம் திருப்பு முனையாக அமைந்ததது. நாடு முழுவதும் சுற்றிய விவேகானந்தர், மூன்று நாட்கள் கன்னியாகுமரியில் தியானம் செய்து வளர்ச்சியடைந்த பாரதத்தை கண்டுணர்ந்தார். அதேபோல பிரதமர் மோடி அங்கு தியானம் செய்து வளமான பாரதத்தை உணர்வார்.

கன்னியாகுமரிக்கு வருவதன் மூலம் தேசிய ஒற்றுமைக்கான சமிக்ஞையை மோடி அளிக்கிறார். தமிழ்நாடு மீதான அவரது அன்பையும் வெளிப்படுத்துகிறார்” என்று கூறுகிறார்கள்.

வரலாற்று பின்னணி என்ன?

இந்தியாவின் தென்கோடி முனை... கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் சந்திக்கும் இடம்... இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சந்திப்புப் புள்ளி என கன்னியாகுமரியை குறிப்பிடலாம்.

இங்குள்ள பாறை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கவுதம புத்தரின் வாழ்வில் சாரநாத் சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளதுபோல, விவேகானந்தரின் வாழ்வில் கன்னியாகுமரியில் உள்ள இந்தப் பாறையும் அதே இடத்தைப் பெற்றிருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

கொல்கத்தாவில் இருந்து கடந்த 1888ம் ஆண்டில் பயணத்தை தொடங்கிய இளம் துறவி விவேகானந்தர், நாடு முழுவதும் அலைந்து திரிந்து 1892-ம் ஆண்டில் கன்னியாகுமரி வந்தார். கடல் நடுவே இருக்கும் அமைந்திருக்கும் பாறைக்கு, கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் நீந்தியே அடைந்த விவேகானந்தர், அங்கு மூன்று நாட்கள் தியானம் செய்தார். இதன்பிறகு அமெரிக்காவில் விவேகானந்தர் ஆற்றிய உரை உலகம் முழுவதும் பெரும் கவனம் பெற்றது.

கன்னியாகுமரி
பங்குசந்தையில் எதிரொலிக்கும் அதானி குறித்த பரப்புரை.. பிரதமர் மோடி, ராகுல் காந்தி மீது வழக்கு!

கன்னியாகுமரியில் தியானம் செய்தபோது, வளர்ந்த பாரதம் குறித்த பார்வையைப் பெற்றார் விவேகானந்தர். அதே இடத்தில் தியானம் செய்வது சுவாமி விவேகானந்தரின் வளர்ந்த இந்தியாவின் பார்வையை உயிர்பிப்பதில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக, பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருவது அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் தமிழகத்தின் மீதான அன்பையும் காட்டுவதாக பிரதமர் அலுவலகம் கூறுகிறது.

கன்னியாகுமரி
மிசோரம்|கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழப்பு.. மழையால் மீட்புப் பணி பாதிப்பு

விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் கட்டி முடிக்கப்பட்ட மண்டபத்தை 1972ல் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி திறந்து வைத்தார். விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும் அதற்கு கீழ்த்தளத்தில் தியான அறையும் உண்டு. இதுதான் விவேகானந்தர் தியானம் செய்த இடமாக கருதப்படுகிறது.

இதே கன்னியாகுமரியில் சிவபெருமானை எதிர்பார்த்து பார்வதி தேவி ஒரே காலில் தியானம் செய்ததாகக் கூறப்படுவதும் உண்டு. தேர்தல் பரப்புரைகளின் முடிவில் ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி,

- 2014ல் மகாராஷ்டிராவில் உள்ள மராட்டிய மன்னர் சிவாஜியின் புகழ் கூறும் பிரதாப்காட் கோட்டையைப் பார்வையிட்டார்.

- 2019ல் கேதார்நாத் சென்றிருந்த பிரதமர் மோடி,

- இம்முறை கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com