பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் கடந்த 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். நரேந்திர மோடி பிரதமரானதும் திடீரென புகழ் வெளிச்சம் யசோதா பென் மீதும் விழத் தொடங்கியது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு யசோதா பென் குஜராத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யசோதா பென்னிற்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சித்தோர்கரில் உள்ள மருத்துவமனையில் யசோத பென் அனுமதிக்கப்பட்டுள்ளார்.