நேதாஜியின் முப்பரிமாண ஒளி சிலையை டெல்லியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

நேதாஜியின் முப்பரிமாண ஒளி சிலையை டெல்லியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நேதாஜியின் முப்பரிமாண ஒளி சிலையை டெல்லியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை டெல்லியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியா கேட்டில் உள்ள அவரது முப்பரிமாண ஒளி வடிவிலான ஹாலோகிராம் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். சிலை திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருதுகளையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

#WATCH | Prime Minister Narendra Modi unveiled hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate on his 125th birth anniversary #ParakramDiwas pic.twitter.com/vGQMSzLgfc
— ANI (@ANI) January 23, 2022

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியர்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து சுதந்திர போராட்டத்தில் நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். கடுமையான சோதனைகளை சந்தித்தபோதும், பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிய மறுத்தவர் அவர்" என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com