பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..!

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் ஒன்பது நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் தொடர்பான கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பதில் அளித்தார். அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் பிரதமர் மோடி ஒன்பது வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக தெரிவித்தார்.

பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு குடியரசு, பக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சென்றதாக பட்டியலை வெளியிட்டார். இதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த காலக்கட்டத்தில் 3 நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார் என்றும் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு 6 நாடுகளுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 13 நாடுகளுக்கு பயணம் சென்றிருப்பதாக இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com