"அம்பேத்கரின் கனவை நிறைவேற்றுவோம்!"-பிரதமர் மோடி

"அம்பேத்கரின் கனவை நிறைவேற்றுவோம்!"-பிரதமர் மோடி

"அம்பேத்கரின் கனவை நிறைவேற்றுவோம்!"-பிரதமர் மோடி
Published on

தேசத்திற்காக அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் சிலைக்கும் அவரின் திரு உருவ படத்திற்கும் பலர் மரியாதையும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தன்னுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

அவருடைய ட்விட்டர் பதிவில் "மகாபரினிர்வன் திவாஸ் நாளில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரை நினைவு கூறுகிறேன். அவரது எண்ணங்களும் இலட்சியங்களும் மில்லியன் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தைத் தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com