“முதலமைச்சராக மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர்” - பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்முகநூல்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் எம்ஜிஆர்-ன் திரைத்துறை மற்றும் அரசியலில் உள்ள பங்களிப்பை போற்றும் விதமாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆர்-க்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில் மோடி, “ம்ஜிஆரின் பிறந்தநாளாகிய இன்று அவரை நாம் நினைவுகூற வேண்டும். தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் திகழ்ந்தவர் அவர்; சமூகநீதி குறித்த எம்ஜிஆரின் படங்கள் சினிமாவையும் தாண்டி மக்களின் மனங்களை வென்றன; முதலமைச்சராக மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர். தமிழகத்தின் வளர்ச்சியில், மேம்பாட்டில் நீங்காத தடம் பதித்தவர். அவருடைய பணிகள் இன்றளவும் நம்மை ஊக்குவிக்கக் கூடியவை” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com