10 ஆண்டுகளில் 10 தோற்றங்கள்; சுதந்திர தின விழாக்களில் பிரதமர் மோடியின் பாரம்பரிய உடைகள்! #PhotoStory
2014ஆம் ஆண்டு
தனது முதல் சுதந்திர தின உரையின்போது வெள்ளை நிற குர்தாவில் தோன்றிய பிரதமர் மோடி, சிவப்பு நிறத்திலான தலைப்பாகையை அணிந்திருந்தார்.

2015ஆம் ஆண்டு
நேரு ஜாக்கெட் அணிந்து மஞ்சள் நிற தலைப்பாகையுடன் பிரதமர் மோடி காட்சியளித்தார்.

2016-ம் ஆண்டு
வெள்ளை நிற குர்தா அணிந்து, பிங்க் மற்றும் மஞ்சள் நிறங்கள் அடங்கிய தலைப்பாகையுடன் பிரதமர் தோன்றினார்.

2017-ம் ஆண்டு...
2017ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி மஞ்சள் நிற குர்தா அணிந்து, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் கொண்ட தலைப்பாகையுடன் காட்சியளித்தார். அந்த தலைப்பாகை தங்க நிற நூலினால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு இருந்தது.

2018-ல்
பிரதமர் மோடி அடர் சிவப்பு மற்றும் காவி நிறங்கள் அடங்கிய தலைப்பாகையை அணிந்திருந்தார்.

2019-ல்
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் HALF SLEEVE குர்தாவில், மஞ்சள் நிற ராஜஸ்தானி தலைப்பாகையுடன் பிரதமர் மோடி தோன்றினார்.

2020-ல்...
வெள்ளை மற்றும் காவி நிறங்கள் அடங்கிய தலைப்பாகை அணிந்து, வெளிர் நிழல் குர்தாவில் காட்சியளித்தார் பிரதமர் மோடி.

2021- ல்...
75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாரம்பரிய குர்தாவுக்கு மேல் நீல ஜாக்கெட் அணிந்திருந்தார் பிரதமர்.

2022-ல்
76-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், இந்தியாவின் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் மூவர்ணம் கொண்ட தலைப்பாகையை அணிந்திருந்தார் பிரதமர். இம்முறை பிரதமர் மோடி வெள்ளை நிற குர்தாவில், பந்தானி தலைப்பாகை அணிந்தபடி தோன்றினார்.

2023-ல்...
77-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் (இன்று), காவி நிற தலைப்பாகையுடன் தோன்றினார். இருப்பினும் அதனுள்ளேயே நீலம், சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்கள் இருந்தன.
