மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடியின் உத்தேச பயணத் திட்டம் வெளியாகியுள்ளது.
வரும் 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி 11.15 மணிக்கு மதுரை விமானநிலையம் வந்தடைகிறார். இதையடுத்து சுற்றுவட்டச்சாலை வழியாக வரும் பிரதமர் மோடி, 11.30 மணிக்கு மண்டோலா நகர் திடலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். 12 மணிக்கு இந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதையடுத்து சாலை மார்க்கமாக மதியம் 1.05 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து கொச்சிக்குப் புறப்படுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக தோப்பூருக்கு பதில் மண்டோலா நகர் திடலில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.