தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகளும் ஈடேறட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து
தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுவதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல அரசியல் தலைவர்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உலகின் மூத்தகுடி எனும் பெருமை கொண்ட தமிழ் மக்களுக்கு, இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி, ட்விட்டரில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார். அதில், “தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.