வழக்கம் போல இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அணிந்து வந்த தலைப்பாகை பேசு பொருளாக மாறி இருக்கிறது.
நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றினார். பிரதமராக பதவியேற்ற பிறகு 5வது முறையாக சுதந்திர தினத்தன்று நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி உறையாற்றினார். இந்நிலையில் வழக்கம் போல இந்தச் சுதந்திர தினத்தன்றும் பிரதமர் மோடி அணிந்து வந்த தலைப்பாகை பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இந்த 5 ஆண்டுகளில் சுதந்திர தினத்தன்று விதவிதமான தலைப்பாகைகளை மோடி அணிந்து வந்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதன்முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய மோடி ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்திலான தலைப்பாகையை அணிந்திருந்தார். 2015ஆம் ஆண்டு சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலான கோடுகள் நிறைந்த தலைப்பாகையையும், 2016ஆம் ஆண்டு சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான ராஜஸ்தானி தலைப்பாகையையும் அணிந்திருந்தார். கடந்த ஆண்டு பாதி வெள்ளை மற்றும் மஞ்சள் சிவப்பு வண்ணங்கள் நிறைந்த தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த ஆண்டு காவி நிறத்தாலான தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.