பிரதமர் மோடிமுகநூல்
இந்தியா
“பிற நாட்டு இடங்களை சொந்தம் கொண்டாட இந்தியா எப்போதுமே விரும்பவில்லை” - பிரதமர் மோடி!
பிற நாடுகளுக்கு சொந்தமான இடங்களை சொந்தம் கொண்டாட இந்தியா எப்போதுமே விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கயானா நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். இந்தியாவுக்கு எப்போதுமே பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதில் விருப்பம் இல்லை. பிற நாட்டு வளங்களை சுய ஆதாயத்திற்கு பயன்படுத்துவதிலிருந்து விலகியே இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மோடி
பிற நாடுகளின் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுவதாகவும் பிற நாட்டு இயற்கை வளங்களை கொண்டு ஆதாயம் பார்ப்பதாகவும் உலகளவில் விமர்சனங்கள் எழுந்துள்ள பின்னணியில் பிரதமரின் இப்பேச்சு அமைந்திருந்தது. வளரும் நாடுகளின் நலன்களுக்கு இந்தியா எப்போதுமே குரல் கொடுத்து வருவதாகவும் பிரதமர் பேசினார்.