\
“100 நாட்களில் வளர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது”- பிரதமர் மோடி பெருமிதம்

“100 நாட்களில் வளர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது”- பிரதமர் மோடி பெருமிதம்

“100 நாட்களில் வளர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது”- பிரதமர் மோடி பெருமிதம்
Published on

பாரதிய ஜனதா அரசின் முதல் 100 நாட்களில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களும், வளர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரோடக் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய நரேந்திர மோடி, 2 வது முறையாக ஆட்சியமைத்த பின் முதல் 100 நாள்களில், வேளாண்மை, தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஏராளமான மக்கள் நலப்பணிகளுக்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 60 ஆண்டுகளில் எந்த கூட்டத்தொடரிலும் இப்படி நடந்ததில்லை என்று அவர் கூறினார்.

கடந்த 100 நாள்களில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள் வருங்காலத்தில் பலன் அளிக்கும் என்று பெருமையுடன் பிரதமர் கூறினார். சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதைப் பார்க்க நாட்டு மக்கள் அனைவரும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்த போது, ஒற்றுமையை அறிந்ததாக அவர் குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்களைப் பற்றி பேசுவதைப் போல, இஸ்ரோவைப் பற்றியும் இப்போது பேச வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com