நவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி
புதிய இந்தியாவை உருவாக்குவதில் புதிய வசதிகள் மற்றும் நவீன கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு உறுதி கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி முந்த்காவில் இருந்து அரியானாவின் பகதூர்கார் வரை 11.2 கிலோமீட்டர் தூர விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஹரியானாவின் குர்கான், பரிதாபாத் நகரங்களுக்கு ஏற்கனவே டெல்லியில் இருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தற்போது மூன்றாவது வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது.
காணொலி மூலம் இந்த சேவையை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையால் சுமார் 6 லட்சம் கார்களின் போக்குவரத்து குறைந்து, சுற்றுச்சூழல் மாசு குறைய வழி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 12 மாநிலங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய மோடி, சர்வதேச உறவு மற்றும் நிறுவன அடிப்படையிலான கூட்டாட்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் முக்கிய உதாரணமாக திகழ்வதாகக் குறிப்பிட்டார்.