“கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயாராக வேண்டும்” - பிரதமர் மோடி
இந்திய மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து சமாளிக்க தயாராக வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். உரையின்போது கொரோனா பாதிப்பு மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருவதாக கூறினார். ஒரு வைரஸ் உலகத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக வருந்தினார். கொரொனாவுடன் போராடி உயிரிழப்பை தடுக்க வேண்டும், அதேசமயம் முன்னேறவும் வேண்டும் என கூறினார்.
கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என தெரிவித்துக்கொண்டார். உலகம் முழுவதும் 2.75 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டார். கொரோனாவிடமிருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே முயற்சித்து வருவதாக தெரிவித்தார். வைரஸ் பாதிப்பு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும் என்றார்.
உலகின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழல் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் கொரோனா போரில் நாம் தற்போது முக்கிய இடத்தில் இருக்கிறோம் எனவும் தெரிவித்துக்கொண்டார். மேலும், இந்தியாவில் தினமும் 2 லட்சம் பிபிஇ கருவி தயாரிக்கப்படுவதாக கூறினார்.