pm modi special details
பிரதமர் மோடிpt web

பிரதமர்களில் தனித்த இடம்பெற்ற மோடி.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ..

பிரதமர் மோடி தனது 75-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ள நிலையில், அவரை இந்தியாவின் மற்ற பிரதமர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும். அதுகுறித்த தகவல்களை இங்கே காணலாம்.
Published on

பிரதமர் மோடி தனது 75-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ள நிலையில், அவரை இந்தியாவின் மற்ற பிரதமர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும். அதுகுறித்த தகவல்களை இங்கே காணலாம்.

இந்தியாவில் பிரதமராக மோடி 2014இல் பதவி ஏற்றபோது அவரது வயது 63. மிகவும் இளையவயதில் பதவி ஏற்ற பிரதமர் ராஜிவ் காந்தி. அவர் 40 வயதில் அரியணை ஏறினார். 81 வயதிற்குப் பின் பதவி ஏற்ற மொரார்ஜியே அதிக வயதில் இப்பதவியை ஏற்றவர். அந்த வகையில், பிரதமர் மோடி ஏறு அல்லது இறங்கு வரிசையில் பார்த்தாலும், பதவி ஏற்பின் அடிப்படையில் தராசின் முள்போல மத்தியில் உள்ளார். 2029ஆம் ஆண்டு மோடியின் பதவிக்காலம் நிறைவடைகையில் வயதில் மூத்த இந்தியப் பிரதமர்கள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடிப்பார். ஒருவேளை அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று பதவிக் காலத்தை 2034இல்நிறைவு செய்தால், அவரே இந்தியாவில் அதிக வயதுடைய பிரதமர் என்ற பெருமையைப் பெறுவார்.

pm modi special details
பிரதமர் மோடிகோப்புப்படம்

இந்தியாவில் எவ்வித இடைவெளியுமின்றி நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர்கள் வரிசையில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார் மோடி. அதிக காலம் பதவியில் இருந்தவர்கள் வரிசையில் நேரு, இந்திராவிற்கு அடுத்தபடியாக 3ஆவது இடத்தில் உள்ளார் மோடி. நாடாளுமன்றத்திற்குள் பிரதமராகவே நுழைந்த பெருமை நேருவுக்கு அடுத்தபடியாக மோடிக்கே உண்டு. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து பின்னர் நாட்டின் பிரதமரானவர்கள் வரிசையில் மோடிக்கு 6ஆவது இடம். மொரார்ஜி, சரண்சிங், நரசிம்ம ராவ், வி.பி.சிங் மற்றும் தேவகவுடா ஆகியோர் இதில் முன்னோடிகள். ஆனால், இவர்களில் நீண்டகாலம் முதல்வராக இருந்த பெருமையும் மோடிக்கே உண்டு. அவர் பிரதமராகும் முன் 12 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் முதல்வராக இருந்துள்ளார். ஆகையால் இந்திய பிரதமர்களில் தனித்துவமிக்கவராக திகழ்கிறார் மோடி.

pm modi special details
உள்நாட்டுப் பொருள்களுக்கே முன்னுரிமை.. பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com