பசி, வேலையின்மை போன்ற பிசாசுகளுடன் நாங்கள் எவ்வாறு போராடுவோம்?: பிரதமருக்கு சிவசேனா கேள்வி

பசி, வேலையின்மை போன்ற பிசாசுகளுடன் நாங்கள் எவ்வாறு போராடுவோம்?: பிரதமருக்கு சிவசேனா கேள்வி
பசி, வேலையின்மை போன்ற பிசாசுகளுடன் நாங்கள் எவ்வாறு போராடுவோம்?: பிரதமருக்கு சிவசேனா கேள்வி

சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னா நாளிதழின் தலையங்கத்தில் கோரோனா காரணமாக 14 கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்துவிட்டதைப்பற்றியும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றியும் தனது 90 நிமிட சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தலையங்கத்தில்“இதுவரை, நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும், ஆனால் அவர்கள் வெளியே வந்தவுடன் என்ன செய்வார்கள்? வேலைவாய்ப்புகள், தொழில்கள் மற்றும் வணிகம் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன. பிரதமர் இவற்றைப் பற்றி பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், ”என்று கூறுகிறது.

மேலும் “பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றியபோது, "உலகப் பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது" என்று கூறியுள்ளார் “உலகத்தை விட்டு விடுங்கள் ஐயா, முதலில் நாட்டின் பொருளாதாரத்தை விரைவுபடுத்துங்கள். சுதந்திர தினம் வந்து செல்கிறது, செங்கோட்டை ஒன்றே, அதுபோல பிரச்சினைகளும் துயரங்களும் இன்னும் அப்படியே இருக்கின்றன. நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதற்கு இராணுவமும் விமானப்படையும் உள்ளன. ஆனால் "நாட்டில் நிலைகெட்டு இருக்கும் பசி மற்றும் வேலையின்மை போன்ற பிசாசுகளுடன் நாங்கள் எவ்வாறு போராடுவோம்?"” என்று அத்தலையங்கம் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com