இந்தியா
சுதந்திர தின உரையில் என்ன பேசலாம்.. ? மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி..!
சுதந்திர தின உரையில் என்ன பேசலாம்.. ? மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி..!
இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் எந்தெந்த விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தனக்கு ஆலோசனை வழங்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பொதுமக்கள் தங்களின் கருத்துகளை நரேந்திர மோடி செயலியில் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை பெற முடியும் என்று நம்புவதாக குறிப்பிட்டுளார்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுப்பது, திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்ப்பது, இட ஒதுக்கீடு முறை, கல்வி உள்ளிட்ட விஷயங்களை மோடி பரிசீலித்து வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களிடம் கருத்துகளைக் கேட்டு, சுதந்திர தின உரையாற்றுவதை மோடி வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.