\
PM Modi School Friend Gets Major Relief in Prolonged Land Dispute
PM ModiANI

'உனக்காக நான் இருக்கேன்..' நண்பனுக்காக இறங்கிவந்த மோடி.. ஒரே நிமிடத்தில் தலைகீழ் மாற்றம்!

இதன்மூலம் 15 ஆண்டுகளாக நீடித்துவந்த நிலப் பிரச்னை, அடுத்த சில மணி நேரங்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது.
Published on

‘எங்கே அடிச்சா வேலை நடக்கும்..என அதன் தன்மையை உணர்ந்து செயல்படுபவர்கள் தான் நாட்டில் அதிகம்..அப்படியொரு நிகழ்வு சமீபத்தில் அரங்கேறி உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியே இதில் தலையிட்டிருப்பது தான் பேசுபொருளாகி உள்ளது...உண்மையில் நடந்தது என்ன பார்க்கலாம் இந்த காணொளியில்..

பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளிக்கால நண்பர் அஸ்கர் அலி வோரா. இவரும், பிரதமர் மோடியும் குஜராத்தின் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இந்தநிலையில், தனது நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் பிரதமரின் நண்பர் அலி வோரா..

கடந்த 1989ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பயந்தர் கிழக்குப் பகுதியில் 2,810 சதுர அளவில் அலி வோரா இடத்தை வாங்கியுள்ளார். அது போலி ஆவணங்கள் மூலம் பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்குச் சொந்தமான கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது...இதை மீட்டுத் தருமாறு, அலி வோரா, சமீபத்தில் பிரதமரைச் சந்தித்து உதவி செய்யுமாறு கோரியுள்ளார்.

PM modi
PM modiani

அவரைச் சந்தித்த அடுத்த நொடியே, மகாராஷ்டிர முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பர்தேசி தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா அந்த நிலத்தின் மீதான கட்டுமான அனுமதியைத் திரும்பப் பெற்று, ஆக்கிரமிப்பைக் கைவிடுவதாக ஒப்புக் கொண்டதுடன், நிலத்தையும் அலி வோராவிடமே ஒப்படைத்தார்.

இதையடுத்து, அலி வோரா, நரேந்திர மேத்தா மீது காவல் துறையில் அளித்த புகாரையும் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் 15 ஆண்டுகளாக நீடித்துவந்த நிலப் பிரச்னை, அடுத்த சில மணி நேரங்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது

PM Modi School Friend Gets Major Relief in Prolonged Land Dispute
போட்டோ எடுக்க ட்ரம்பிடம் கெஞ்சினாரா மெலோனி.. ஜி7 உச்சி மாநாட்டில் நடந்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com