"பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சமரசம் கிடையாது" - மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு!
மலேசியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சமரசம் கிடையாது என பிரதமர் மோடி உறுதியளித்தார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு இருப்பதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்றும் இரட்டை நிலைப்பாடு இருக்காது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் பேசிய பிரதமர் மோடி, தங்களுக்கும் மலேசியாவுக்கும்இடையே சிறப்பான உறவு இருப்பதாக குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் இருப்பதாக பாராட்டினார். இதன்பின் பாதுகாப்பு, வர்த்தகம், செமி கண்டக்டர் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் 6 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வமாக ராணுவ மரியாதை வழங்கப்பட்டது
இந்தியாவிலுள்ள பலரை போல மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்ஜிஆர் ரசிகர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமக்கு அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தின் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டதாக பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக பிரதமர் மோடிக்கும லேசியாவில் தமிழ் பாரம்பரியப்படி நடனமாடியும் திருமுறைகள் ஓதியும் வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
மலேசியாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் பிரதமர் தனது உரையில் புகழாரம் சூட்டியிருந்தார். மலேசியபல் கலைக்கழகத்தில் திருவள்ளுவர் பெயரில் மையம் அமைக்கப்படும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்

