50% வரி விதித்த டிரம்ப்; பதிலடி கொடுத்த மோடி!
50% வரி விதித்த டிரம்ப்; பதிலடி கொடுத்த மோடி!புதிய தலைமுறை

’விவசாயிகளின் நலனே எனக்கு முக்கியம் ’ - 50% வரி விதித்த டிரம்ப் ; பதிலடி கொடுத்த மோடி!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி இருக்கும் நிலையில், இதற்கு மறைமுகமாக பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துள்ளார்.
Published on

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு பிறகு இந்த வரிவிதிப்பு அமலுக்கு வர இருக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளார் ட்ரம்ப். மேலும், அமெரிக்காவுக்கான வரி அதிகளவில் இருப்பதாலும், இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதாலுமே இத்தகைய வரி விதிப்பு என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என்றும் நாட்டு நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்நிலையில், இந்திய விவசாயிகளின் நலனே முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி டிரம்பிற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், இது குறித்து எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “ இந்திய விவசாயிகளின் நலனே எனக்கு முக்கியம், அதற்காக பெரிய விலையையும் கொடுக்கத் தயார். அமெரிக்க எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் வேளாண்பொருட்கள், பால்பொருட்கள், மீன்வளத்துறை பொருட்கள் மீது எந்தவித சமரசத்தையும் இந்தியா அனுமதிக்காது. இதற்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற்குத் தயாராக உள்ளது. ” என்று புதிய வரிவிதிப்பிற்கு எதிராக பிரதமர் மோடி மறைமுகமாக டிரம்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதிக வரி விதிப்பிற்கான காரணங்கள்? 

இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பதும், பேச்சுவார்த்தை இழுபறியிலேயே இருக்கின்றன என்பதும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்துமாறு டிரம்ப் கூறியும் இந்தியா வாங்குவதும், அதிக வரி விதிப்பிற்கு காரணமாக பார்க்கப்படுகின்றன. மேலும், அமெரிக்க இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேளாண் பொருட்களை விற்பனை செய்ய நினைக்கிறது. இதை இந்திய அரசு மறுத்துவிட்டது.

50% வரி விதித்த டிரம்ப்; பதிலடி கொடுத்த மோடி!
HEADLINES| இந்தியாவுக்கு வரியை உயர்த்திய ட்ரம்ப் முதல் ரிஷிகேஷில் சிவன் சிலையை தொடும் வெள்ளம் வரை!

இந்தியாவில் இதற்கு அனுமதி இல்லை. அதேபோல அமெரிக்க பால் பொருட்களை இந்தியாவில் விற்க வேண்டுமென்றும் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதையும் இந்தியா மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com