"10-12 ஆண்டுகளுக்கு முன்பு சரிவின் விளிம்பிலிருந்த இந்தியா, இப்போது..."- பிரதமர் பெருமிதம்

"10-12 ஆண்டுகளுக்கு முன்பு சரிவின் விளிம்பிலிருந்த இந்தியா, இப்போது..."- பிரதமர் பெருமிதம்
"10-12 ஆண்டுகளுக்கு முன்பு சரிவின் விளிம்பிலிருந்த இந்தியா, இப்போது..."- பிரதமர் பெருமிதம்

"கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இப்போதுதான் இந்தியாவிடம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, நம்பிக்கையான மற்றும் வலுவான நிதி அமைப்பு உள்ளது"- என பட்ஜெட்க்கு பிந்தைய கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நிதிதொடர்பான இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நிதி தொடர்பான தன் நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “கோவிட் காலத்துக்குப் பிறகு, இந்தியாவின் நிதி மற்றும் பணவியல் கொள்கையின் விளைவை உலகம் பார்க்கிறது. இந்தியாவின் பட்ஜெட், தொலைநோக்கு, பொருளாதாரம் ஆகியவற்றில் உலகமே நம்பிக்கை கொள்ளாத காலமொன்று இருந்தது. ஆனால் இன்று, புதிய இந்தியாவின் நிதி ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அணுகுமுறை நிலைமையை மாற்றியுள்ளது. 2021-22ல், உற்பத்தியில் அதிக முதலீடுகளைக் இந்தியா பெற்றுள்ளது. உலகளாவிய விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமாகவும் இந்தியா உள்ளது. இத்தகைய வாய்ப்புகளிலிருந்து இந்தியா பலன்களைப் பெற வேண்டும்.

இன்றைய புதிய இந்தியா புதிய பலத்துடன் முன்னேறி வருகிறது. 8-10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது, இப்போதுதான் அங்கீகரிக்கப்பட்ட, நம்பிக்கையான மற்றும் வலுவான நிதி அமைப்பு உலகளவில் இந்தியாவிடம் உள்ளது. ஆம், வலுவான நிதி அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. வங்கி அமைப்புகளின் நன்மைகளை அனைவருக்கும் எடுத்துச் செல்வதே காலத்தின் தேவை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் பிணையம் இல்லாத உத்தரவாதக் கடன் கிடைத்துள்ளது. 10-12 ஆண்டுகளுக்கு முன்பு சரிவின் விளிம்பில் இருந்த இந்தியா இப்போது பிரகாசமான புள்ளியாக உள்ளது

வங்கி உத்தரவாதம் இல்லாமல், குடிமக்களின் விருப்பங்களை நிறைவேற்ற 20 லட்சம் கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் ஸ்வாநிதி யோஜனா திட்டத்தின் மூலம் முதன்முறையாக 40 லட்சம் தெருவோர வியாபாரிகள் வங்கித் துறையின் ஆதரவைப் பெற்றுள்ளனர். உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் ஏற்றுமதியில் சாதனை அதிகரித்துள்ளது.

வரி செலுத்துவது தேசத்தை கட்டியெழுப்புவதில் நேரடியாக தொடர்புடையது. நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. 2013-14ல் 3.5 கோடி தனிநபர் வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 2020-21ல் இதன் எண்ணிக்கை 6.5 கோடி ஆக அது அதிகரித்துள்ளது. தொழில்துறை 4.0-ல், இந்தியாவில் கட்டப்பட்ட தளங்கள் உலகிற்கு முன்மாதிரியாக மாறி வருகின்றன” என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com