`அரசியல் நோய்களை சிறப்பாக குணப்படுத்தி வருகிறது பாஜக அரசு!’- பிரதமர் மோடி

`அரசியல் நோய்களை சிறப்பாக குணப்படுத்தி வருகிறது பாஜக அரசு!’- பிரதமர் மோடி

`அரசியல் நோய்களை சிறப்பாக குணப்படுத்தி வருகிறது பாஜக அரசு!’- பிரதமர் மோடி
Published on

குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் வாக்கு வங்கி அரசியலால் பீடித்திருந்த நோய்களுக்கு தனது அரசு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறப்பான முறையில் குணப்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தின் அசர்வா பகுதியில் உள்ள பொது மருத்துவமனையில் சுகாதார வசதிகளை தொடங்கி வைத்துப் பேசிய அவர், குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கு முன், சுகாதாரம், மின்சாரம், குடிநீர் வசதியின்றை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என பல்வேறு நோய்கள் பீடித்திருந்ததாகக் கூறினார்.

இதற்கு வாக்கு வங்கி அரசியலே அடிவேர் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்த பழைய நடைமுறையில் மாற்றத்தை கொண்டுவர தனது அரசு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்தார். தனது வழிமுறையின்படி அறுவை சிகிச்சை என்பது, செயல்பாடின்மை, மந்தகதி, ஊழல் போன்றவற்றை வெட்டி அகற்றுவதாகவும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com