கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து இன்று பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்திவருகிறார்.
இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி விநியோகம், பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்களைக் குறித்து ஆலோசித்தார். இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும் தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.