இந்தியா
குழந்தைகள் வலுவாக இருந்தால்தான் நாடு வளரும் - பிரதமர் மோடி
குழந்தைகள் வலுவாக இருந்தால்தான் நாடு வளரும் - பிரதமர் மோடி
ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அம்சங்களில் அரசு கவனம் செலுத்திவருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப்பணியாளர், கிராம செவிலிப்பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, வலுவற்ற அடிப்படை மீது வலுவான கட்டுமானங்களை கட்ட முடியாது என்று கூறிய பிரதமர், அதேபோல, நாட்டின் குழந்தைகள் வலுவற்றவர்களாக இருந்தால், நாட்டின் முன்னேற்றமும் பின்னடைந்துவிடும் என்றார்.
கர்ப்பிணிகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் பிரசவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு தனது நன்றி உணர்வை தெரிவித்துக்கொள்வதாக மோடி குறிப்பிட்டார்.