மெய்நிகர் வாயிலாக பாஜக உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.
மெய்நிகர் வாயிலாக உரையாடும் பிரதமர் மோடி, நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்த மத்திய பட்ஜெட் குறித்து, பாஜக தொண்டர்களிடம் எடுத்துரைக்க உள்ளார். டெல்லியில் பிரதமரின் உரையாடலில் பங்கேற்க பாஜக மக்களை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் குறித்து மக்களிடையே நேற்று பேசிய பிரதமர், அப்போது “விவசாயிகள், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், மிக சிறப்பான நிதிநிலை அறிக்கையை தயார் செய்திருக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதற்கு என் பாராட்டுகள். இந்த பட்ஜெட் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சியையும் நிதிநிலை அறிக்கை உறுதி செய்யும். பாதுகாப்பு துறைக்கு தேவையான ஆராய்ச்சிகளில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது சிறு,குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும். மேலும், கங்கையை மாசுகளிலிருந்து காக்கும் வகையில், நதிக்கரையோரம் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும் என்ற திட்டம் மிக சிறப்பானது. மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து இன்று காலை 11 மணிக்கு விரிவாக பேசவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்தி: நிரந்தரப்பதிவு கணக்கு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய தகவல்