ஏலத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்கள்
பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப்பொருட்கள் வரும் 14ஆம் தேதி முதல் ஏலம் விடப்படவுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். மேலும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். அப்போது பிரதமர் மோடிக்கு பல நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த பரிசுப்பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அந்தத் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி மோடிக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 772 பரிசுப்பொருட்கள் வரும் 14ஆம் தேதி ஏலத்தில் விடப்படுகின்றன. பரிசுப்பொருட்களின் குறைந்தபட்ச ஏலத் தொகை 200 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 2 லட்சத்து 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த ஜனவரி மாதமும் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் ஏலமிடப்பட்டு, அந்த தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்பட்டது.