மோடியிடம் ஆட்டோகிராஃப்: மாணவியை திருமணம் செய்ய போட்டி!

மோடியிடம் ஆட்டோகிராஃப்: மாணவியை திருமணம் செய்ய போட்டி!

மோடியிடம் ஆட்டோகிராஃப்: மாணவியை திருமணம் செய்ய போட்டி!
Published on

மோடியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய மாணவியை திருமணம் செய்ய கடும் போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 16 ஆம் தேதி, பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அவர்  பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று  பந்தல் சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர், பன்குராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரிடா முடி (19).

தன் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்களை பார்க்கச் சென்றார் பிரதமர் மோடி. அப்போது அவரிடம் ரிடா, ஆட்டோகிராஃப் கேட்டார். உடனடியாக மோடி அந்தப் பெண்ணுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தார். இதையடுத்து ரிடா அந்தப் பகுதியில் பிரபலமாகிவிட்டார். 

(சகோதரியுடன் ரிடா)

இதுகுறித்து ரிடா கூறும்போது, ’பிரதமர் நலம் விசாரிக்க என் அருகில் வந்தபோது, உங்களை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு உங்கள் ஆட்டோகிராஃப் வேண்டும் என்றேன். உடனடியாகச் சிரித்துக்கொண்டே அருகில் இருந்தவரை பார்த்தார். அவர் பேப்பரைக் கொடுத்ததும் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தார். அதில், ’நலமோடு இரு’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வந்தபிறகு, நான் பிரபலமாகிவிட்டேன். என்னிடம்  அதிகமானவர்கள் நலம் விசாரித்தார்கள்’ என்றார்.


 
ரிடாவின் அம்மா சந்தியா கூறும்போது, ‘நலம் விசாரித்ததோடு, கடந்த 10 நாட்களில் மட்டும் 2 குடும்பத்தினர் ரிடாவை பெண் கேட்டு வந்தனர். ஜார்கண்டில் இருந்து வந்த குடும்பம் சொந்த தொழில் செய்வதாகவும் வரதட்சனை ஏதும் வேண்டாம் என்றும் கூறினர். பின்னர் தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். இன்னொரு குடும்பத்தினர் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டனர்’ என்றார். இதே போல இன்னும் சில குடும்பத்தினரும் இவர்களிடம் பெண் கேட்டு வருகிறார்களாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com