"பணமில்லாமல் யாரும் பின் தங்கி விடக்கூடாது’ - விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் மோடி பேச்சு!

"பணமில்லாமல் யாரும் பின் தங்கி விடக்கூடாது’ - விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் மோடி பேச்சு!
"பணமில்லாமல் யாரும் பின் தங்கி விடக்கூடாது’ - விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் மோடி பேச்சு!

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை செலவு செய்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்று வரும் மகாகேல் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களிடம் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நீங்கள் கற்றுக்கொள்ள விளையாடும்போது, நீங்கள் ஒரு விளையாட்டை வெறுங்கையுடன் விடமாட்டீர்கள். இன்று நாடு முழுவதும் விளையாட்டுத் துறையில் பெரிய மாற்றத்தை நாடு காண்கிறது. கற்கவும், வெற்றி பெறவும் களத்தில் இறங்குங்கள்.

கற்றல் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம். ராஜஸ்தான் மாநிலம், பல விளையாட்டில் திறமையானவர்களை நாட்டிற்கு தந்துள்ளது மற்றும் பல பதக்கங்களை வென்று நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளது. முதன்முறையாக, வீரர்களை மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன் இந்திய பார்க்கிறது. முன்னதாக, நாட்டின் இளைஞர்கள் விளையாட்டு உணர்வைக் கொண்டிருந்தனர், ஆனால் வளங்களின் பற்றாக்குறை மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு ஆகியவை அதற்குத் தடையாக இருந்தன. இப்போது நம் வீரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தீர்க்கப்படுகிறது.

2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது விளையாட்டு அமைச்சகத்திற்கான வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடு, கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பல்வேறு கேல் மஹாகும்ப் விளையாட்டுகள் மூலம் இந்தியாவின் இளைஞர்களின் திறனை வெளிப்படுத்துகிறது. மாவட்ட அளவில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தபட்டு வருகிறது. இம்முறை அதிகபட்ச பட்ஜெட் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு மேலாண்மை மற்றும் விளையாட்டு தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளும் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது.

பணப்பற்றாக்குறையால் இளைஞர்கள் யாரும் பின் தங்கி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சிறந்த வீரர்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை செலவு செய்கிறது. இந்தியாவின் முன்மொழிவின் பேரில், ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாகக் கொண்டாடுகிறது. ராஜஸ்தானில் தினையின் மிகவும் வளமான பாரம்பரியம் உள்ளது. வாழ்க்கைத் துறையைப் போலவே விளையாட்டுத் துறையிலும் உடற்தகுதி முக்கியமானது.

எனவே "ஃபிட் இந்தியா" விற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. தினையை ஊக்குவிப்பதற்கான நம் முன்முயற்சி உலகளாவிய நிகழ்வாக மாறியுள்ளது. இப்போது தினை "ஸ்ரீ ஆன்" என்ற பெயரில் அறியப்படுவது மிகவும் முக்கியம், அது நாடு தழுவிய அடையாளமாக மாற வேண்டும். இந்த ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடப்படுகிறது. அனைவரும் தங்கள் உணவில் ஸ்ரீ ஆனை (தினை) சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அனைத்து விளையாட்டு உபகரணங்களும் சிறு மற்றும் நடுத்தர தொழில்சாலைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. விளையாட்டு என்பது ஒரு பரந்த தொழில் ஆகும், இது பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது, குறிப்பாக சிறுகுறு தொழிலை ஊக்குவிப்பதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com