‘மோடியின் குடும்பம்’ என்ற பெயரை நீக்குமாறு வலியுறுத்திய மோடி!
குடும்ப அரசியல் குறித்த பேச்சு எழுந்தபோது, பிரதமர் மோடி தனிநபர் என்ற கருத்து பேசுபொருளானது. இதனால் அவரது ஆதரவாளர்கள், தங்களை மோடியின் குடும்பத்தினராக கூறி, மோடிக்கா பரிவார் என சமூக வலைதள பெயர்களில் துணைப் பெயராக சேர்த்தனர்.
இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த பின் தற்போது, அவற்றை நீக்குமாறு கோரியுள்ள பிரதமர், நாம் அனைவரும் ஒரே குடும்பம் என எழுதி தங்களின் அன்பைக் காட்டியதாகவும், அதன் மூலம் வலிமை பெற்றதாகவும் கூறியுள்ளார்.
இதற்காக, மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்க புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை, இந்திய மக்கள் அழுத்தமாக பதிவு செய்திருப்பதாகவும், மோடி குடும்பம் என்பது பெயரளவில் நீக்கப்படுவதாகவும், ஆனால் நமது உறவு மேலும் வலுவான, பிரிக்க முடியாத ஒன்று எனவும் கூறியுள்ளார்.