\
அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேண டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேண டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேண டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

டெல்லியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இருவேறு பேரணியில் இருதரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் 3-ஆவது நாளாக நேற்றும் வன்முறைகள் தொடர்ந்தன. வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், டெல்லி மக்கள் அனைவரும் அனைத்து நேரங்களிலும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் விரைவில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்புவது முக்கியம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லி நிலவரம் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் டெல்லியில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com