\
13 நாடுகளின் தலைவர்களில் மோடி செல்வாக்கு வாய்ந்தவர்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் சர்வே

13 நாடுகளின் தலைவர்களில் மோடி செல்வாக்கு வாய்ந்தவர்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் சர்வே

13 நாடுகளின் தலைவர்களில் மோடி செல்வாக்கு வாய்ந்தவர்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் சர்வே
Published on

அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 13 நாடுகளில் அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் உலகத் தலைவர்களிடையே பிரதமர் மோடி மிக செல்வாக்கு வாய்ந்தவர் (55%) என மதிப்பிடப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயமாக, பிரதமர் நரேந்திர மோடியை உலகின் மிகவும் பிரபலமான  தலைவராக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக பாஜக தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஜே.பி.நட்டா தெரிவித்தார். "நமது பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்டால் உலக தலைவர்களிடையே மிக உயர்ந்ததாக மதிப்பிடப்பட்டார். பல்வேறு பிரச்சினைகளை திறம்பட கையாண்டதற்காகவும், கோவிட் -19 நெருக்கடியை நிர்வகிப்பதற்காகவும் அவர் மீண்டும் மிகவும் பிரபலமான அரசாங்கத் தலைவராக உருவெடுத்துள்ளார், ”என்று  ட்விட்டரில் நட்டா கூறினார். "இந்த மதிப்பீடு அவரது திறமையான தலைமை மற்றும் கடின உழைப்புக்கு சான்றாகும், இந்த சவாலான காலங்களில் அனைத்து உலகளாவிய தலைவர்களிக்கிடையே பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்”என்றும் அவர் கூறினார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பிரதமர் மோடியைப் பாராட்டியதோடு, “பிரதமர் மோடியின் புகழ் மற்றும் நம்பகத்தன்மை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது உண்மையில் இது இந்தியாவுக்கு ஒரு பெருமையான தருணம்” என  ட்விட்டரில் தெரிவித்தார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பிரதமரை வாழ்த்தினார், இது நாட்டிற்கு பெருமை அளிக்கும் விஷயம் என்று அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com