பிரதமர் மோடி
பிரதமர் மோடிமுகநூல்

“பட்ஜெட் தாக்கலுக்கு முன் அன்னை லட்சுமியை வழிபட்டுவிட்டு வருகிறேன்” - பிரதமர் மோடி!

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் வருகை தந்த பிரதமர் மோடி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
Published on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜன.31) தொடங்கியுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இந்தநிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் வருகைதந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன்; அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும். பாஜகவின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் இது. மூன்றாவது முறையாக ஆட்சி செய்ய எங்களுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெற்றிருக்கும். புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள், மூலதனம் ஆகியனதான் இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக இருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள்... பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. நாளை தாக்கலாகும் பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும் என நம்புகிறேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன; இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புகிறேன். பட்ஜெட் தாக்கலுக்கு முன் அன்னை லட்சுமியை வழிபட்டுவிட்டு வருகிறேன். ஏழை, எளிய மக்களை அன்னை லட்சுமி ஆசிர்வதிக்க பிரார்த்தித்தேன்” என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com