சுனிதா வில்லியம்ஸ், பிரதமர் மோடிpt web
இந்தியா
“சுனிதா வில்லியம்ஸால் 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை” - பிரதமர் மோடி
சுனிதா வில்லியம்ஸால் 140 கோடி இந்தியர்களும் பெருமை அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸால் 140 கோடி இந்தியர்களும் பெருமை அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுனிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் எங்களின் இதயத்துக்கு மிக நெருக்கமாகவே இருக்கிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ட்ரம்புடன் பேசும் போதெல்லாம் தங்களின் நலம் குறித்து தொடர்ந்து பேசி வந்தேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். தாங்கள் இந்தியாவுக்கு வருவீர்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என, சுனிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, மிகவும் பெருமைக்குரிய மகள் ஒருவரை, தங்கள் நாட்டுக்கு வரவேற்பதில் இந்தியா மிகவும் மகிழ்ச்சி அடைகிறது என்றும் கூறியுள்ளார். தங்களின் சாதனையால் 140 கோடி இந்தியர்களும் பெருமை அடைகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.