\
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
Published on

அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோயில் பூமி பூஜையில் செங்கலை எடுத்து வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோயிலுக்கான பூமி பூஜை வைபவம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனுமன் கர்கி கோயிலில் அனுமனை தரிசித்த பின், ராமர் கோயில் பூமி பூஜையில் மோடி பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து கோயிலுக்கான 40 கிலோ வெள்ளியால் ஆன செங்கலை எடுத்து அடிக்கல் நாட்டினார்

தொடர்ந்து ஸ்ரீ ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாட உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com