இந்தியா
"சுற்றுச்சூழல் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் விவேக்" - பிரதமர் மோடி புகழஞ்சலி
"சுற்றுச்சூழல் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் விவேக்" - பிரதமர் மோடி புகழஞ்சலி
திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் தொடர்பாக மிகவும் அக்கறை கொண்டவராக இருந்தவர் நடிகர் விவேக் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் "நடிகர் விவேக்கின் திடீர் மரணம் என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. அவரது அற்புதமான நகைச்சுவை திறன் மக்களை எப்போதும் மகிழ்வித்து வந்திருக்கிறது. தன்னுடைய திரைப்படங்களிலும் வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் தொடர்பாக தொடர்ந்து அக்கறையை செலுத்தி வந்தார். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அஞ்சலி. ஓம் சாந்தி." என பதிவிட்டுள்ளார்.