”நலத்திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைவதே உண்மையான மதச்சார்பின்மை”- கோவாவில் பிரதமர் மோடி பேச்சு

நலத்திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைவதே உண்மையான மதச்சார்பின்மை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கோவாவில் 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசுகையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள் கோவா மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். நலத்திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைவதே உண்மையான மதச்சார்பின்மை மற்றும் உண்மையான சமூக நீதி என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மக்கள் தங்களுக்கான உரிமையைப் பெற மாற்று வழிகளை நாட வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார். லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வாக இருக்கும் கோவா, ஒரே பாரதம் உன்னத பாரதத்தினை உணர்த்தும் வகையில் திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com