உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி இன்று காலை வழிபாடு செய்தார். அவருக்காக அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின் றனர். தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார்.
கேதார்நாத் கோயிலில் நேற்று வழிபட்ட அவர், குகையில் விடிய விடிய தியானம் செய்தார். இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் இன்று காலையில் பத்ரிநாத்துக்குச் சென்றார். அங்குள்ள கோயிலில் இன்று வழிபட்டார். பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.