பிரதமர் மோடியுடன் இஸ்ரேலியப் பிரதமர்: புகைப்பட கேலரி
பிரதமர் மோடி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ஆறு நாட்கள் சுற்றுப் பயணமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று இந்தியா வந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இணையப் பாதுகாப்பு, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்களும் இவற்றில் அடங்கும்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பிரதமர் மோடியும் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த உடன்பாடுகள் கையெழுத்தாகின. மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றனர். இந்தியாவில் ஆறு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நெதன்யாகு, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்ல இருக்கிறார்.