\
பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி!
Published on

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று பூடான் புறப்பட்டுச் சென்றார். 

இந்த ஆண்டு பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின் பிரதமர் மோடி, முதல் முறையாக பூடானுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்கை நட்பு ரீதியாகச் சந்தித்து பேசும் பிரதமர் மோடி, அந்நாட்டின் 4 வது மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியாலையும் சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

பிரதமர் மோடி, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் இடையிலான இந்த சந்திப்பு, இரு நாடுகளின் இடையே பாரம்பரிய அரசியல் உறவுகளை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்றும் வெளியுறவுத்துறை ஏற்கனவே கூறியிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com