டெல்லி: இந்திய பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகம் திறப்பு

டெல்லி: இந்திய பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகம் திறப்பு
டெல்லி: இந்திய பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகம் திறப்பு

இந்திய பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார்.

முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தொடங்கி இதுவரை உள்ள அனைத்து பிரதமர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி பேதமோ அல்லது சித்தாந்த பேதமோ கருதாமல் அனைவரின் சேவைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர்கள் பின்பற்றிய செயல் திட்டங்களையும் அவர்களின் சிந்தனைகளையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com