மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணித்த மோடியும் பினராயி விஜயனும்

மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணித்த மோடியும் பினராயி விஜயனும்

மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணித்த மோடியும் பினராயி விஜயனும்
Published on

கேரள மாநிலத்தில் முதல் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் பளரி‌வட்டம் தொடங்கி பத்தடிபாலம் வரை மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொண்டார். முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மெட்ரோமேன் என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் ஆகியோரும் மோடியுடன் பயணித்தனர்.

கேரள மெட்ரோ ரயில்‌சேவை ‌பல வழிகளில் தனித்துவம் கொண்டாதாக திகழ்கிறது. 5008 கோடி ரூபாய்‌ மதிப்பில் 13 கிலோமீட்டர் தொலைவிலான இந்த மெட்ரோ ரயிலின் முதல்‌ கட்ட பணி 45 மாதங்களிலேயே முடிக்‌கப்பட்டது. மெட்ரோ ரயிலுக்கான ஒட்டுமொத்த மின் தேவையில் கால் பங்கு சூரிய ‌சக்தி மூலம் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் தூண்களில் வெர்டிகல் கார்டன், அமைக்கப்பட உள்ளது. அதிக எண்ணிக்கையில்‌ பெண்களும், மூன்றாம் பாலி‌‌னத்தவர்களும் பணி புரியும் மெட்ரோ ரயில் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com