இரண்டாவது நாளாக குஜராத்தில் வெற்றிப் பேரணி நடத்திய பிரதமர் மோடி

இரண்டாவது நாளாக குஜராத்தில் வெற்றிப் பேரணி நடத்திய பிரதமர் மோடி

இரண்டாவது நாளாக குஜராத்தில் வெற்றிப் பேரணி நடத்திய பிரதமர் மோடி
Published on

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது நாளாக வெற்றி பேரணியை நடத்தினார்.

காந்திநகர் மாவட்டத்தில் உள்ள தேகம் நகரிலிருந்து லாவட் கிராமத்தில் உள்ள ராஷ்ட்ரிய ரக்‌ஷா பல்கலைக்கழகம் வரை இந்த வெற்றி பேரணி நடைபெற்றது. ராஜ்பவனிலிருந்து கார்மூலம் தேகம் சென்றடைந்த மோடி அங்கு திறந்த ஜீப்பிற்கு மாறினார். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு அவருக்கு மக்கள் மலர்தூவி வரவேற்பளித்தனர்.

முன்னதாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து காந்திநகரில் உள்ள கட்சி தலைமையகம் வரை வெற்றிப் பேரணி நடத்தினார். பிரதமரின் இந்த வெற்றி பேரணிகள் டிசம்பரில் நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கான ஒரு தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com