இந்தியா
முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை
பாக் உடன் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
பாக் உடன் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் முப்படைத் தலைமை தளபதிகள் பங்கேற்கும் 3ஆவது ஆலோசனைக் கூட்டம் இது..
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போன்றோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, எல்லை தாண்டிய முன்னேற்றங்கள் மற்றும் போர் நிறுத்த நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.