\
PM Modi Hoists Tricolor at Red Fort for 13th Time
பிரதமர் மோடிPt web

80வது சுதந்திர தினம் | செங்கோட்டையில் 13வது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி!!

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக பிரதமர் மோடி கொடியேற்றியிருக்கிறார்.
Published on

80வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமான் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர்.

செங்கோட்டை
செங்கோட்டைPt web

முன்னதாக, சுதந்திரதினத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. செங்கோட்டையை சுற்றியுள்ள சாலைகள் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா, இளைஞர்சக்தி, வளர்ந்த இந்தியா 2047 ஆகிய கருப்பொருள்களில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

PM Modi Hoists Tricolor at Red Fort for 13th Time
5 நொடியில் 800 கி.மீ வேகம்.. வாயை பிளக்க வைத்த சீனா!

இந்தச்சூழலில் தான், இன்று காலை செங்கோட்டையில் கொடியேற்றுவதற்கு முன்பாக, பிரதமர் மோடி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமருக்கு முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, முதன்முறையாக செங்கோட்டையில், வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. இதையடுத்து, பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். இதையடுத்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றி வருகிறார்.

PM Modi Hoists Tricolor at Red Fort for 13th Time
ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம் ஆனது எப்படி? பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14 ஏன்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com