செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடிx

நாட்டின் 79வது சுதந்திர தினம்| செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் மூவர்ண கொடியை ஏற்றினார்.
Published on

2025 ஆகஸ்டு 15-ம் தேதியான இன்று நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருப்பதால், தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. செங்கோட்டை பகுதி முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. தலைநகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ட்ரோன், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்

அதேபோல சுதந்திர தினத்தையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுகிறார். இதையொட்டி அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை முழுவதும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன. மாநிலத்தின் முக்கிய பகுதிகள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்..

நாட்டின் 79வது சுதந்திர தினத்திற்காக வாழ்த்து தெரிவித்திருக்கும் மோடி, சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க கடினமாக உழைக்க இந்நாள் ஊக்குவிக்கப்படும். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின், ”சமத்துவம், கண்ணியம், மரியாதையுடன் வாழ சுதந்திர போராளிகளின் லட்சியத்தை நிலைநிறுத்துவோம்; ஜனநாயகத்தை திருட முடியாத, வாக்குகள் மதிக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்

மதவெறியை நிராகரிப்பது, பாகுபாடுகளை களைவது, ஒடுக்கப்பட்டோரை காப்பதுதான் உண்மையான சுதந்திரம்; அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்” என வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்திருக்கும் இபிஎஸ், ”அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், நம் தாய்திரு நாடு விடுதலை பெற, போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு, நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும், மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும், இந்நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம்... வாழிய பாரத மணித்திரு நாடு!” வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com