டெல்லியில் இன்று நடைபெற்ற தசரா பண்டிகை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வில் வித்தை செய்து பழகியது அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று டெல்லியில் நடந்த தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு நடந்த நாடகவிழாவில் ராமன் லக்ஷ்மணன் வேடமிட்டிருந்த கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக அவர்களுக்கு பூஜை செய்தார் பிரதமர்.
அதன் பின் பேசிய அவர், பண்டிகைகள் யாவையும் நம்முடைய சமூக மதிப்பை பிரதிபளிக்கின்றன என்று கூறினார். அதோடு 2020ல் நாடு அடைய போகும் முன்னேற்றத்திற்கான பங்களிப்பை ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டுக்காக அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின் அங்கே வைக்கப்பட்டிருந்த வில்லை எடுத்து நாணில் அம்பை பொறுத்தி செலுத்தினார். அப்போது கூடியிருந்த கூட்டத்தினர் குரல் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர்.