\
ஐ.நா பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

ஐ.நா பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

ஐ.நா பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
Published on

ஐ.நா பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல இருக்கும் பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 26ஆம் தேதி ஐ.நா பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இதற்காக வரும் 22ஆம் தேதி தனி விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்கிறார். 23ஆம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரம், பயங்கரவாத அச்சுறுத்தல், சீனாவின் செயல்பாடுகள் என பல விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துவர் எனத் தெரிகிறது.

பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். பின்னர், செப்டம்பர் 24 ஆம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். செப்டம்பர் 26ஆம் தேதியன்று ஐ.நா கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com